SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உளவு விவகாரத்தால் தகவல் தொழில்நுட்பத் துறையை பாதுகாக்க தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

2019-05-16@ 15:23:47

வாஷிங்டன் : வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்க கணினி தொலைதொடர்புகளை பாதுகாக்கும் வகையில் தேசிய நெருக்கடி நிலையை பிறப்பித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். Huawei நிறுவனம் தயாரிக்கும் மென் பொருள்களை பயன்படுத்தி சீனா தனக்கான தகவல்களை உளவு பார்த்து வருவதாக பல நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுச் சார் விவகாரங்கள் திருடப்படுவதும் உளவு பார்க்கப்படுவதும் தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேசிய நெருக்கடி நிலையை பிறப்பித்து டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்தி கொள்வது தடுக்கப்படும்.  எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்ற போதிலும் சீனாவில் Huawei தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்கவே இந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட உடன் Huawei நிறுவனம் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் இணைத்து அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா அரசின் சிறப்பு அனுமதியை பெறாமல் Huawei நிறுவனம் அமெரிக்கா தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்