SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் 640 கோடி ரூபாய்க்கு ஏலம் போன முயல் சிலை: 33 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தகவல்

2019-05-16@ 14:20:14

வாஷிங்க்டன் : அமெரிக்காவில் தூய எஃகினால் வடிவமைக்கப்பட்ட 33 ஆண்டுகள் பழமையான முயல் சிலை 640 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தது.  அமெரிக்க கலைஞரான  ஜெப் குருஸ் என்பவர் 1986ம் ஆண்டு வடிவமைத்த இந்த முயல் சிலை 104 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகும். முகம் இன்றி கையில் கேரட்டை பிடித்தவாறு நிற்கும் இந்த முயல் சிலை தான் தற்போது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. 91.1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்க்கு இந்த முயல் சிலை ஏலம் எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டிஷ் ஓவியர் டேவிட் ஹாக்னி ஓவியம் 634 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை ஜெப் குருஸின் முயல்சிலை முறியடித்துள்ளது. ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் வாழும் கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பு இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டது பெரிய சாதனை என கிறிஸ்ட்டிஸ் ஏலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்