SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

2019-05-16@ 14:09:13

சென்னை : அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பொன்பரப்பியில் தேர்தல் நாளில் வன்முறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையையும் தெருவில் போட்டு உடைத்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே வன்முறை வெடித்தது .தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்த நிலையில் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது வாக்குச்சாவடியில் நடைபெற்ற வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை என்றும் எனவே மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் அதிகாரியை அணுக அறிவுறுத்தல்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது தொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படியும், அவர் மறு தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் பொன்பரப்பி சேர்க்கப்படாத சூழலில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களுடன் செல்ல அறிவுறுத்தி இருப்பது மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்