SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு,..ஸ்டாலின், சந்திரசேகர ராவுக்கு சோனியா கடிதம்

2019-05-16@ 09:21:23

டெல்லி: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6-ம் கட்டத்தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து கடைசி கட்டத்தேர்தல் (7-ம் கட்டம்) வரும் 19 -ம் தேதி நடைபெறுகிறது. பிறகு 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ளது. மாநிலக்கட்சிகள் தான் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார்கள் என தெரிகிறது. யார் அடுத்த ஆட்சி அமைப்பார் என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்.

இதனால் காங்கிரஸ். பாஜக மற்றும் மாநிலக்கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதாக தகவல்  தெரிவிக்கின்றன. குறிப்பாக தெலுங்கு தேசம் , பிஜு ஜனதா தளம் , தெலங்கானா ராஷ்டீரிய சமிதி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகளுக்கு சோனியா திடீர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்