SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாளையார் சோதனை சாவடியில் ரூ.21.25 லட்சம் ஹவாலா பணத்துடன் 2 பேர் கைது

2019-05-16@ 06:19:11

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வாளையார் சோதனைச் சாவடியில் காரில் கடத்திய ரூ.21.25 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை - கேரள எல்லையான வாளையாறில் கேரள அரசின் கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. நேற்று இந்த சோதனைச் சாவடியில் கலால்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை பகுதியில் இருந்து வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தனர். அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்று மடக்கினர்.

அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பேக்கை பரிசோதித்தபோது, அதில் ரூ.21.25 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பீகாரை சேர்ந்த பாஜிவ் ராம் ராவ், சுமித் ஜாவிர் என்பதும், தற்போது மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் வசிப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்துக் கொண்டிருந்தபோது பாஜிவ் ராம் ராவ் தன்னிடம் இருந்த செல்போனை உடைக்க முயன்றார். உடனே அதிகாரிகள் அந்த செல்போனை வாங்கி பார்த்தனர்.

அதில் தங்க கட்டிகளின் போட்டோ இருந்தது . விசாரணையில், வெளிநாட்டில் இருந்து கோழிக்கோட்டுக்கு கடத்தி வந்த தங்கக் கட்டிகளை இவர்கள் கோவைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் கிடைத்த பணத்தை கேரளாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்