SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என் மீது தாக்குதல் நடத்தியது திரிணாமுல் காங்கிரஸ் தான்: அமித்ஷா குற்றச்சாட்டு

2019-05-16@ 06:16:05

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜ தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி நடந்தது. அப்போது, அமித் ஷாவிற்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில்  அமித் ஷா நேற்று அளித்த பேட்டி:  

மேற்கு வங்கத்தில் மக்களவையின் 6 கட்ட தேர்தலின் போதும் கலவரங்கள் நடந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் பாஜ போட்டியிடுகிறது. அங்கெல்லாம் எந்த வன்முறையும் கிடையாது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறை அரங்கேறுகின்றன. கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தான் சேதப்படுத்தினார்கள்.

மம்தா தலைமையிலான கட்சிக்கு அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்று நடத்தப்பட்டது. ஆனால், இதனை .அவர்கள் திரித்து கூறுகிறார்கள். இவை அனைத்தையும் பார்த்து தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

மக்களவை தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐந்து மற்றும் ஆறாவது கட்ட தேர்தலிலேயே பாஜ ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. 7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயக கழுத்தை நெறிக்கிறார் மம்தா:
மேற்கு வங்கத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய மோடி, “தீதியின் (மம்தா பானர்ஜி) குண்டர்கள் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும்  மறைத்து வைத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி சென்றுள்ளனர். அதிகார வெறி பிடித்த மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை அவர் அழித்து விட்டார்.

மேற்கு வங்க மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால்தான் தீதி பீதி அடைந்துள்ளார். பாஜ.வை பழி வாங்குவேன் என்று கூறியதை மம்தா செயல்படுத்தி விட்டார். அவர் அப்படி கூறிய பிறகுதான் கொல்கத்தா பேரணியில்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என்றார்.

வெளியாள் கிடையாது:
பாஜ தலைவர் அமித் ஷா மேலும் கூறுகையில், “ நான் பாஜ தலைவர். நான் எனது கட்சியின் பிரசாரத்துக்காக இங்கு வந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்திற்கு வந்த வெளியாள் என்று கூறுகிறார்கள். இந்த பேச்சில் என்ன நியாயம் உள்ளது? மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் மும்பை அல்லது பெங்களூரு சென்றால் அவர் வெளியாள் என்று அழைக்கப்படுவாரா? மம்தா தீதி டெல்லிக்கு சென்றால் வெளியாள் என்று அழைக்கலாமா?,” என்றார்.

அதிர்ஷ்டவசமா தப்பிச்சுட்டேன்...
கொல்கத்தாவில் நடந்த கலவரத்தின்போது அமித் ஷா சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், “ மத்திய ரிசர்வ் போலீசார் அளித்த பாதுகாப்பினால்தான் எந்த காயமும் இன்றி என்னால் தப்பி வர முடிந்தது,” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

 • puyal

  கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்