SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தா கலவரத்தில் ஈடுபட்டது யார்? பாஜ.வுக்கு எதிராக 43 வீடியோ ஆதாரம்: மம்தா வெளியிட்டதால் பரபரப்பு

2019-05-16@ 06:12:18

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜ தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜ குற்றம்சாட்டி வருகிறது. டெல்லியில் நேற்று பேட்டி அளித்த அமித் ஷா, ‘கொல்கத்தா கலவரத்துக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டினார்.

மேலும், கலவரம் தொடர்பாக பாஜ தலைவர் அமித் ஷா 3 புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால், வன்முறை தொடர்பாக பாஜ.வுக்கு எதிராக பல்வேறு வீடியோ ஆதாரங்களை மம்தா பானர்ஜி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இதுவரை, பாஜ.வுக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொருட்களை உடைப்பது, கட்டிடங்களை தாக்குவது, கல்லூரியை சேதப்படுத்துவது என அனைத்தும் பதிவாகி உள்ளது. அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ‘ஜெய் ராம்’ என்று கூறிக்கொண்டே வாகனங்களுக்கு தீ வைக்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதைதான் திரிணாமுல் தீ வைத்ததாக பாஜ குற்றம் சாட்டியிருந்தது.

இது மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தான் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையையும் உடைத்து சேதப்படுத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் மீது பழி வரும் என பாஜ நினைத்த நிலையில் தற்போது நிலைமை அதற்கு எதிராக திரும்பியுள்ளது.

புரொபைல் படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்:
கொல்கத்தா வன்முறையை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தங்களது புரொபைல் புகைப்படங்களை மாற்றி வித்யாசாகர் படத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வைத்துள்ளனர். இதுவும் பாஜ.வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தத்துவ மேதை வித்யாசாகரின் சிலையை பாஜ.வினர் உடைத்ததை, மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக திரிணாமுல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ளவும் முடிவெடுத்திருப்பதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்