SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மழை குறைவால் நிலத்தடி நீர் சரிவு கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவேண்டும்: தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவு

2019-05-16@ 05:52:39

தேனி: தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளதால் பாசனக்கிணறுகள், போர்வெல்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, விவசாய மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளுக்கு அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழையளவு குறைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது. தலைநகர் சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. நகராட்சி, பேரூராட்சிகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. முறையாக குடிநீர் வழங்கக்கோரி மறியல் உள்ளிட்ட போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள வேளாண்மை, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதுமான மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மாநிலம் முழுவதும் வறண்ட சூழ்நிலை நிலவுகிறது.

கிணறுகளில் உள்ள குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, வழக்கமான முறையில் வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சினால் கூடுதல் தண்ணீர் வீணாகும். இந்த நிலையில் விவசாய, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்த தெளிவான அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும்.

விவசாயிகளிடம் அரசு சொட்டுநீர் பாசனத்திற்கு வழங்கும் மானியத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு கிராமவாரியாக இலக்கு நிர்ணயம் செய்து, நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அவர்களை சொட்டுநீர் பாசன அமைப்புகளை அமைக்க அறிவுறுத்தி சாகுபடி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

உதவி இயக்குனர்கள் அனைவரும் தோட்டக்கலை அலுவலர்கள் மூலம் இப்பணியினை கண்காணித்து இலக்கினை எட்ட முழு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். வேளாண்மைத்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை தொடர்ந்து விவசாய, தோட்டக்கலை அலுவலர்கள் கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்