SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி

2019-05-16@ 02:02:25

ராபவுல்: பப்புவா நியூ கினியா நாட்டில் 7.5 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் மாகாணத்தின் ரபவுல் நகரில் 10 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.இது குறித்து பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் டோன் டோகுனய் கூறுகையில், ``இந்த நில நடுக்கம் சுனாமி ஏற்படும் அறிகுறியாக தென்படுவதால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால்  இதுவரை எவ்வித பொருட்சேதமோ, உயிர்சேதமோ தெரிவிக்கப்படவில்லை,'' என கூறினார்.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள செய்தியில், `பப்புவா நியூ கினியா, சாலமோன் தீவுகள் மற்றும் அதனை சுற்றி 1000 கிலோ மீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம்' என எச்சரித்துள்ளது. இதையடுத்து, அதனை  சுற்றியுள்ள தீவுகள், கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு இதே போல 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்