SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8, 9ம் தேதிகளில் ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு

2019-05-16@ 02:02:24

சென்னை: அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய  அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை எழுத 6 லட்சம்  பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 இந்நிலையில், தேர்வு நடக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலை தேதியை அறிவித்தது. அதன்படி ஜூன் மாதம் 8ம் தேதி தாள் ஒன்றுக்கான தேர்வும்,  தாள் இரண்டுக்கான தேர்வு  9ம் தேதியும் நடக்கும். இந்த இரண்டு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்