SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயிண்ட்...

2019-05-16@ 01:01:27

* ஆஸ்திரேலிய ஆண்கள் ஹாக்கி அணியுடன் நடந்து வரும் தொடரின் 4வது போட்டியில், இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆஸி. வீரர்கள் பிளேக் கோவர்ஸ், ஜெரிமி ஹேவர்ட் தலா 2 கோல் போட்டனர். முதல் 3 போட்டியிலும் இந்திய அணி டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 5வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

* பாகிஸ்தான் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியின்போது இங்கிலாந்து அணி பந்துவீச்சில் தாமதம் செய்ததை அடுத்து, கேப்டன் இயான் மோர்கனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 40 சதவீதமும், சக வீரர்களுக்கு தலா 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டதுடன் நாளை நடக்க உள்ள 4வது ஒருநாள் போட்டியில் விளையாட மோர்கனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டிமாச் (51 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி குரகவோ அணிக்கு எதிராக தனது முதல் சவாலை எதிர்கொள்கிறது.

* வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரர் கிறிஸ் கேல் (39 வயது) 5வது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளார். இதற்கு தயாராவதற்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக அவர் யோகாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் அவர் சிறப்பாக விளையாடி 490 ரன் குவித்தார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் 2 சதம், 2 அரை சதத்துடன் 424 ரன் (சராசரி 106.00) விளாசி உள்ளார். இதனால், எதிர்வரும் உலக கோப்பையில் இவரது ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்