SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் பங்கேற்க அனுமதி

2019-05-16@ 00:40:03

மதுரை, மே 16: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் பங்கேற்க ஐகோர்ட் கிளை அனுமதித்துள்ளது. தூத்துக்குடி ஸ்ெடர்லைட் எதிர்ப்பு ேபாராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாட்சன் சகோதரி ஜான்ரோஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் மே 22ல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து எஸ்ஏவி பள்ளி மைதானம் வரை மாலை 6.30 முதல் 9.30 மணி வரை பேரணி நடத்தவும், அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.


இதேபோல் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில், ‘‘மே 22ம் தேதி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் மய்யவாடி பேருந்து நிறுத்தம் எதிரே, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது எட்டையபுரம் சாலை கலைஞர் அரங்கில் அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் முன் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏற்கனவே, மே 22ல் தனியார் ஓட்டலில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏன் அடுத்தடுத்து அனுமதி கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர்கள் தரப்பில், ‘‘முந்தைய உத்தரவில் 250 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மாலையில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டது.

 இதையடுத்து நீதிபதிகள், ‘‘மே 22ம் தேதி தனியார் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சி முழுவதையும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இரு தரப்பும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கலந்து கொள்வோரின் பட்டியலை நிகழ்ச்சி முடிந்த பின்னர் தூத்துக்குடி எஸ்பியிடம் வழங்க வேண்டும்’’ என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்