SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலர் கண்காட்சி நாளை தொடங்குவதை முன்னிட்டு ஊட்டியில் கிடுகிடுவென உயர்ந்த ஓட்டல் அறை, உணவுக்கட்டணம்

2019-05-16@ 00:37:55

 சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

 அரசுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம்

ஊட்டி,  மே 16: நாளை (வெள்ளி) மலர் கண்காட்சி தொடங்குவதால் சுற்றுலா பயணிகள்  ஊட்டியில் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கும் அறைகள், உணவு கட்டணங்கள்  கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 123-வது மலர் கண்காட்சி நாளை தொடங்கி  21ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியை காண  சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனை பயன்படுத்திக்  கொண்டு ஊட்டியில் லாட்ஜ், காட்டேஜ்களில் அறைகளின் கட்டணம் பல  மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ₹800-₹1500 வரை  வசூலிக்கப்பட்ட தங்கும் அறைகளின் கட்டணம், ₹3000-₹4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெரும்பாலான ஓட்டல்களில் சாதாரண  நாட்களில் உணவுக்கு வசூலிக்குப்படும் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்கள்  வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும்  சுற்றுலா பயணிகள், தற்போது ஊட்டிக்கு வந்தால் லாட்ஜ்,  காட்டேஜ்களின் அறை கட்டண உயர்வு, ஓட்டல்களில் உணவு கட்டணங்கள் உயர்வு  ஆகியவைகளால் மன நிம்மதியோடு சுற்றுலாவை அனுபவிக்க முடிவதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.


 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் லாட்ஜ், காட்டேஜ் மற்றும் உணவு விடுதிகளில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதை தடுக்க தனி  குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்தது. இதனால், ஓரளவு கட்டணம் குறைக்கப்பட்டது.  ஆனால், இம்முறை லாட்ஜ், காட்டேஜ் மற்றும் ஓட்டல்களை கண்காணிக்க சிறப்பு  குழு எதுவும் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக, சோப்பு, பேஸ்ட், டவல், ஷாம்பு, டீ, காபி உள்ளிட்ட பொருட்களின் செயற்கை விலை உயர்வாலும், லாட்ஜ், காட்டேஜ், தங்கும் அறைகளின் கட்டணம் உயர்வாலும்  சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விவரம்  அறிந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிலர், ஊட்டியில் தங்குவதை தவிர்த்து காலையில் வந்து மாலை  நேரங்களில் திரும்புகின்றனர். இன்னும் பலரோ ஊட்டிக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில்  சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அரசுக்கு நஷ்டம்  ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அறை, உணவு கட்டணங்களை பொதுமக்களின் நலன் கருதி குறைக்க வியாபாரிகளும், கட்டணத்தை கட்டுப்படுத்த தமிழக அரசும் நடவடிக்கை வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


புறநகருக்கு படை யெடுப்பு: ஊட்டியில் சாதாரண நாட்களில் ₹.800 முதல் ₹.1500 வரை வசூலிக்கப்பட்ட தங்கும் அறைகளின் கட்டணம் ₹.4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு புக்கிங் நிறுவனம் பெரும்பாலான ஓட்டல்கள், காட்டேஜ்களை புக்கிங் செய்து வைத்துள்ளது. இந்த நிறுவனம் அறைகளின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டுள்ள காட்டேஜ்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். அங்கு சிறிய ஓட்டல்கள், மெஸ்களில் குறைந்த கட்டணத்தில் தரமான உணவு கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்