SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீசை தாக்கிய 3 பேர் கைது

2019-05-16@ 00:28:03

ஆலந்தூர்: ஆலந்தூரில் போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது  செய்யப்பட்டனர். கத்திப்பாரா மேம்பாலம் அருகே உள்ள  தண்டுமாநகரை சேர்ந்தவர் கணேசன் (28). பரங்கிமலை ஆயுதப்படை பிரிவு காவலர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காத்திப்பாரா மேம்பாலம் கீழே வந்தபோது எதிரே வந்த 3 பேர் காவலர் கணேசனை  வழிமறித்து  தகராறில் ஈடுபட்டனர்.

இதனை அவர் தட்டிக் கேட்டபோது கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த கணேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக பரங்கிமலை காவல் நிலையத்தில் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  காவலரை தாக்கிய தண்டுமாநகரை சேர்ந்த தசரதன், (25), தங்கபாலு (22), மெய்யழகன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்