SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்

2019-05-14@ 21:33:01

டெல்லி: நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பணம் பரிவர்த்தனை சேவை கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. அதை மேலும்  அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அனைத்து கடைகளிலும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய  கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் அதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது. QR குறியீடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள்  சென்றடையும். அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் மூலமாக அதிகம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடாக சீனா உள்ளது. சீனாவில் உள்ள பெரும்பான்மையானார்கள் Wechat மற்றும் Alipay மொபைல் பணம் பரிவர்த்தனை செய்து வருகிறனர். பிச்சைக்காரர்கள் கூட  அங்கு மொபைல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் பெறுகின்றனர். சிங்கப்பூர், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் மொபைல் பணம் பரிவர்த்தனை சேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. QR குறியீடு சேவை மூலமாகப்  பணம் பரிவர்த்தனை செய்ய பிஓஎஸ் இயந்திரங்கள் தேவையில்லை. எளிதாக ஒரு பேப்பரில் QR குறியீட்டை அச்சிட்டு கடையில் ஒட்டினால் போதும். பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து எளிதாகப்  பணத்தைப் பெறலாம். சில்லறை தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த QR குறியீடு சேவை அனைத்து கடைகளிலும் கட்டாயமாக்கும் போது கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குவது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளவர்கள் இந்த QR குறியீடு சேவை மூலம் எளிதாக பணம் பரிவர்த்தனை செய்வார்கள். ஆனால் ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் எப்படி யூபிஐ சேவையை பயன்படுத்தி பணம் செலுத்துவார்கள் என்பது  குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் மொபைல் வாலெட் மூலம் செய்யும் பரிவர்த்தனைகளின் அளவு 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்