SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ்த் தாய் சிலை
2013-05-14@ 12:05:27

சென்னை: மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கூறினார். சட்டசபையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெருமைவாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையை போல தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கிய செல்வங்கள், கட்டிட  கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்.

ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மை சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை திருவள்ளுவர் திருநாளிலும்,  தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்றும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருக்குறளை பிற நாட்டு அறிஞர்களும் பாமரர்களும் புரிந்துகொள்ள வழிவகை செய்தவரும், அறநெறிக் கருவூலமான நாலடியார் மற்றும் திக்கெட்டும் தமிழ்ப் புகழ் பரப்பும் திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவருமான அயல்நாட்டு தமிழ் அறிஞர் ஜி.யு.போப்பின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும். விருது தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். இதற்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும். பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பச் சூழ்நிலைகளையும், தற்போதைய காலச் சூழ்நிலையையும், கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 6 ஆயிரத்தில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பத்திரிகையாளரின் மனைவிக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
prescription coupon card prescription coupon viagra online coupon
venlafaxine forum click venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்