SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குவாலிபயர் 2 : டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

2019-05-10@ 23:03:49

விசாகபட்டினம்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்க்கொள்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிராக நடந்த 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்