SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொஞ்சம் என்னென்னு பாருங்க... ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2019-05-09@ 01:32:33

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றியவர் தேஜ் பகதூர் யாதவ். இவர், கடந்த 2017ம் ஆண்டில் பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது அங்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, அவரை அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக தேஜ் பகதூர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை தேர்தல் அதிகாரிகள், நிராகரித்தனர். இதை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தலைமை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேஜ் பகதூரின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்