உறவினர்கள், வக்கீல்கள் சந்திக்க வசதியாக மதுரை, கோவையில் பெண்களுக்கு தனி சிறை

Date: 2013-05-11@ 05:46:13

பெண் கைதிகளை உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் சந்திக்க வசதியாக மதுரை மற்றும் கோவையில் ஸீ30 கோடி செலவில் புதிதாக பெண்களுக்காக தனி சிறைச்சாலை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.பேரவையில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த அறிக்கை:சென்னை, திருச்சி மற்றும் வேலு£ர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பெண்களுக்கு தனியாக சிறைகள் உள்ளன. பெண் கைதிகள் தங்களுடைய சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் கைதி 350 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார். இவ்வாறு நீண்ட து£ரத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்படுவதால் கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க இயலாத நிலையும், கைதிகளை சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதிலும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த சிரமங்களை தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் பெண் தண்டனை கைதிகளை தங்க வைப்பதற்காக ஸீ30 கோடி செலவில் மதுரை மற்றும் கோவையில் புதிதாக தனி சிறைகள் உருவாக்கப்படும். தர்மபுரி விழுப்புரத்தில் மாவட்ட சிறைகள்: தற்போது தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 10 மாவட்ட சிறைகள் என மொத்தம் 19 மாவட்டங்களில் சிறைகள் உள்ளன. மீதமுள்ள 13 மாவட்டங்களில் மாவட்ட சிறைகள் அமைக்கப்படுவது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக திருப்பூர், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஸீ39 கோடி செலவில் மாவட்ட சிறைகள் அமைக்கப்படும்.மதுரை மத்திய சிறையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த திட்டம் புழல் மத்திய சிறை வளாகத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மற்ற சிறைகளிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, 6 மத்திய சிறைகள், 2 பெண்கள் தனி சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் ஸீ30 கோடி செலவில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மரபு முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார தேவையை குறைத்திடவும், சிறையின் மின் தேவையை மரபுசாரா எரிசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் வகையிலும், மேற்கூரை சூரிய ஒளி உற்பத்தி முறை புழல் மத்திய சிறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மற்ற மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகிய சிறைகளிலும் ஸீ35 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் கூறினார்.

rite aid load to card coupons link rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News