SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் ஏரியில் படகு கவிழ்ந்தது; 2 பேர் உயிர் தப்பினர்

2019-04-26@ 12:11:06

*பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என புகார்

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியில் பயிற்சியில் ஈடுபட்ட படகு கவிழ்ந்தது. இதில் 2 மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்து கவிழ்ந்த படகை பிடித்து உயிர் தப்பினர். கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் சார்பில் ஒலிம்பிக் படகு என்ற ஸ்கல் படகு பயிற்சி தினமும் காலையில் நடத்தப்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில் கோடை விழா போட்டிக்காக இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொடைக்கானலை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவர்களும் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு படகு பயிற்சி மேற்கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது இல்லை என்றும் குறிப்பாக லைப் ஜாக்கெட் அணியாமல் பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் சிலர் ஏரியில் ஸ்கல் படகு பயிற்சி மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 2 மாணவர்கள் படகிலிருந்து தண்ணீருக்குள் விழுந்து உள்ளனர். லைப் ஜாக்கெட் அணியாததால் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தபடி கவிழ்ந்த படகை பிடித்து உயிர் தப்பினர்.எனவே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க படகு பயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்