SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளுமா கல்வித்துறை : அதிகரிக்கும் புத்தக சுமை அவஸ்தைபடும் மாணவர்கள்

2019-04-26@ 11:59:48

பழநி : பள்ளிகளில் மாணவர்களின் புத்தக சுமை அதிகரிப்பை கல்வித்துறை கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 2019- 20ம் கல்வியாண்டு துவங்க உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் புத்தகங்களை மூட்டையாக தூக்கி கொண்டு செல்லும் வகையில் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் புத்தக சுமைகளை குறைக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது, 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு 1.5 கிலோ, 2 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு 3 கிலோ, 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கு 4 கிலோ, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 5 கிலோ, 10ம் வகுப்பிற்கு 5 கிலோவிற்கு அதிகமாக கூடாது என்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. ஆனால், இதை எந்த பள்ளிகளும் பின்பற்றுவதில்லை.

இதனால் மாணவர்களின் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கூன் விழுந்து விடுகிறது. எனவே, இதுபோன்ற பாதிப்புகள் வராமல் மாணவர்களை பாதுகாக்கும் வகையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுத்து அதனை முழுவீச்சில் கண்காணிக்க வேண்டும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்