SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரமக்குடி பகுதியில் ஆதரவின்றி திரியும் மனநலம் பாதித்தவர்கள்

2019-04-26@ 11:14:32

* பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

பரமக்குடி : மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களை, பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு செல்லும் கொடுமை அதிகமாக உள்ளது. இவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், ராமேஸ்வரம் வரும் அனைத்து வெளிமாநில பக்தர்களும் பரமக்குடி வழியாகதான் ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். அதிகமாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

 இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் உறவினர்களை ராமேஸ்வரம் அழைத்து வந்து பாதியில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால், பரமக்குடி, ராமேஸ்வரம், பார்த்திபனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில், சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டவர்களை மனநலம் பாதித்தவர் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்க்காமல், அவர்களிடம் சிலர் தவறாக நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், வட மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றிக்கொண்டுள்ளனர். பீகார், ஒடிசா, பஞூசாப், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சன்டிகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதை பொருள்கள் பயன்படுத்துவதால், மனநலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதிய மருத்துவ வசதி, டாக்டர்கள் இல்லாதது, மருத்துவம் பார்க்க பணம் இல்லாத சூழ்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் ரயில் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

மேலும் மும்பை, கொல்கத்தாவில் உள்ள மனநல மருத்துவமனையில் நோய் பாதிப்பு முற்றிய நிலையில் உள்ளவர்களை,அங்கு உள்ள ஊழியர்கள் ரயில் மூலம் அழைத்துவந்து ராமேஸ்வரம் ராமநாதபுரம்,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல்,பசியின் கொடுமையால் மற்றிவர்களிடம் உள்ள பொருள்களை பறித்து சாப்பிடும் போதுதான் பொதுமக்களை தாக்க நினைக்கின்றனர்.ஈகையால் மாவட்ட மனநல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் தெருக்களில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டர்களுக்கு சிகிச்சை கொடுத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்