SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் போது பறிமுதல் பணத்தை ஆவணங்களை காட்டி திருப்பி பெறலாம்

2019-04-26@ 10:57:34

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி ரூ.82 லட்சத்து 25 ஆயிரத்து 652 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை காட்டினால் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளது. சிவகங்கை மக்களவை தேர்தல் மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு மார்ச் 10ல் அறிவிக்கப்பட்டு அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. ஏப்.18ல் மக்களவை தேர்தல் நடத்து முடிந்தது. அதுவரை தேர்தல் நடத்தை விதி மீறல் அடிப்படையில் தீவிர பரிசோதணைகள் நடந்தன.

தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் வாகன பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன பரிசோதனை மற்றும் தகவல் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. பறக்கும் படை மற்றும் தணிக்கைக் குழு என 107 குழுக்கள் 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உட்பட பல்வேறு பொருட்களை கண்காணித்து உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்பட்டால் அவற்றை கைப்பற்றி மாவட்ட கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் ஒப்படைத்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பொருட்கள் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 40 இடங்களில் ரூ.5,76,500 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், ரூ.14,700 மதிப்பிலான பனியன்கள், ரூ.13,650 மதிப்பிலான மசாலாப்பொடி பாக்கெட்கள், ரூ.6,475 மதிப்பிலான வெடிப்பொருட்கள், ரூ.26,25,000 கொடிகள் மற்றும் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.82 லட்சத்து 25 ஆயிரத்து 652 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்ததால் ஏப்.23, ஏப்.24 ஆகிய இரண்டு நாட்கள் உரிய ஆவணங்கள் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் உண்மையெனில் அவர்களிடம் பறிமுதல் செய்த பணம் அல்லது பொருட்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்