SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண் உள்பட 2 பேருக்கு வலை

2019-04-26@ 00:27:43

சென்னை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பெண் உள்பட 2 பேரை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி கண்டிகை அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர்  அரோக்கிய சாமி. இவரது மனைவி டயானா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர்கள் நேற்று முன்தினம், எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் ஒரு புகார் அளித்தனர். அதில், மானாம்பதி கண்டிகை பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர், தனது 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் அடைத்துவைத்து, அவரது நண்பர் இருதயராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் எனது மகளையும், குடும்பத்தையும் அழித்துவிடுவோம் என மிரட்டியயுள்ளனர் என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க பெருநகர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறுமியின் பெற்றோர், எஸ்பியிடம் புகார் அளித்ததை அறிந்ததும், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையில் போலீசாரின் விசாரணையில், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியார் சிறுமியை சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என தெரிந்தது. சென்னையில் ஒரு முதியவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்கள், போலீசாரிடம் சிக்கினால், இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள், யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, தனிப்படை அமைத்து உத்திரமேரூர், வேலூர், வந்தவாசி, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜை, போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி மல்லிகா. கூலி தொழிலாளி. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு 7 வயதில் மகள் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). சரவணன், மல்லிகா ஆகியோர் வேலைக்கு சென்றதும், சிறுமி வீட்டில் இருப்பாள். அப்போது முருகன்,  சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்