SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணை நடிகை கணவர் மீது தாக்குதல் : மாமனார் உள்பட 3 பேர் கைது

2019-04-26@ 00:27:06

சென்னை: அவடி அடுத்த மோரை, புதிய கண்ணியம்மன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். இவர்களுக்கு பாலாஜி (4) என்ற மகன் உள்ளான். ராஜேஸ்வரி சினிமாவில் நடிப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சூட்டிங் முடிந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு இரவு தாமதமாக வந்துள்ளார். அப்போது, கார்த்திகேயன் ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார். தகவலறிந்து அதேபகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரியின் தந்தை கிருஷ்ணன் (48), தம்பி ரமேஷ் (20) ஆகியோர் வந்து, கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். கார்த்திகேயன் பதிலுக்கு தாக்கியதுடன், வீட்டிலிருந்த கத்தியால் ரமேஷின் முதுகில் குத்தியுள்ளார். பிறகு அக்கம் பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கி விட்டனர். அதன் பின்னர், 3 பேரும் ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன், வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகிறார்.

* சென்னை கே.கே.நகர், கோட்டூர்புரம், கொரட்டூர், போரூர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் சைக்கிள் திருடி வந்த வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், இந்திரா நகரை சேர்ந்த முகமது பாஷா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
* நந்தனம், எஸ்.எம். நகரை சேர்ந்த ராஜா (39) என்பவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
* ஆதம்பாக்கம், கேசரி நகர், 6வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சீனிவாசன் (69), நேற்று முன்தினம் இரவு மகனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* கீழ்க்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (64) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் இறந்தார். இந்த துக்கத்தில் அவரது மனைவி பவானி (58) நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* புளியந்தோப்பு திருவிக 6வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி இம்ரான் (32) என்பவர் மீது அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் இவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
* கிண்டி மடுவின்கரை 5 பர்லாங் ரோட்டை சேர்ந்த மகேந்திரன் (36) என்பவர், தனது வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை நேற்று சுத்தம் செய்தபோது தவறி கீழே விழுந்து இறந்தார்.
* கடலூரை சேர்ந்த சபரிநாதன் (26), கோயம்பேடு தேவி கருமாரியம்மன் நகரில் தங்கி, பர்னிச்சர் கடையில் பணியாற்றி வந்தார். இவர், காதல் தோல்வியால் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.
* கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (26). இவருடைய மனைவி சித்ரா (21). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் சித்ரா மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர் எப்படி மாடியில் இருந்து விழுந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அயனாவரத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகனுக்கு பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள அஞ்சலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹25 ஆயிரத்தை அபேஸ் ெசய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்