SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இப்படிகூடவா நடக்கும்?

2019-04-26@ 00:13:38

இப்படிக்கூடவா நடக்கும் என்று சில சம்பவங்கள் நம்மையே அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிடும். அது போன்ற சம்பவம் தான் ராசிபுரத்தில் அரங்கேறியுள்ளதாக கூறப்படும் குழந்தை விற்பனை. மக்கள் எதற்கு ஆசைப்படுகிறார்களோ, அவர்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஒரு கும்பல் நியாய, தர்மம் பார்க்காமல், மனசாட்சியில்லாமல் வெறும் பணத்தை மட்டுமே குறியாக வைத்து தொழில் செய்கிறார்கள். சட்டரீதியாக இந்த செயல்கள் தவறு என்று தெரிந்து கொண்டும் நிழலுலகிலேயே தொடர்ந்து தனது கடையை திறந்து வியாபாரத்தை பெருக்குகிறார்கள்.

இது போன்ற சம்பவத்துக்கு அரசு ஊழியர்கள் சிலரும் உடந்தையாகிவிட்டால் போதும் கேட்கவே வேண்டாம். பிரச்னையில்லாமல் தொழில் பரந்துவிரியும். இப்படி மகப்பேறு மருத்துவமனையை சுற்றி பச்சிளங்குழந்தையை விற்பனை செய்யும் கும்பல் தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டுள்ளது. ராசிபுரத்தில் வாட்ஸ்அப்பில் உலா வரும் ஆடியோ, மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த ஆடியோவில் பெண் ஒருவர் பேசுகிறார்.

அவர் ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா, கருப்பா அல்லது சிவப்பா? கருப்பு என்றால் ஒரு விலை, சிவப்பு என்றால் அதற்கு தனி விலை. ஆண் குழந்தைக்கு ரூ.4 லட்சம், பெண் குழந்தை ரூ.2.50 லட்சம். அமுல் பேபி போல் கொழு கொழு குழந்தையென்றால் அதுக்கு ஏக கிராக்கியாம். இப்படியாக அந்த பெண் பேசும் ஆடியோ அப்பகுதியில் வைரலாகியுள்ளது. நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிகள், குடும்ப வறுமையில் இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்ட தம்பதிகள் ஆகியோரை குறிவைத்து இக்கும்பல் தங்கள் வியாபாரத்தை நடத்துகிறது.

இவர்களிடம் ஆசைவார்த்தை கூறி குழந்தையை விற்பனை செய்ய சம்மதிக்கவைக்கிறார்கள். மேலும் தவறான வழியில் பிறக்கும் குழந்தைகளையும் விற்பனை செய்து வருகிறார்கள். குழந்தையை விற்பது மட்டுமல்ல 45 நாட்களில் நகராட்சியில் பிறப்பு சான்றிதழும் பெற்று தந்து விடுகிறார்களாம். இதற்கு ரூ.70 ஆயிரம் செலவாகிறதாம்.

இப்படி அந்த ஆடியோவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளதை பார்த்தால், இப்படிக் கூடவா செய்வாங்க என்று மக்கள் பீதி கலந்த ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்து நர்ஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளாக இவர் குழந்தை விற்பனையை செய்து வருவதாக வாட்ஸ்அப் ஆடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது போன்ற சட்டவிரோத செயலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால், அதன் பிறகு சாலையில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிவிடும் என்பதே சமூக ஆர்வலர்
களின் கருத்தாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்