SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூலூரில் இலை கட்சியை தோற்கடிக்க களம் இறங்கி உள்ள முன்னாள் அமைச்சர் பற்றி சொல்கிறார்...wiki யானந்தா

2019-04-26@ 00:05:00

‘‘நாலு ெதாகுதி தேர்தல் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்குமாமே...அப்டியா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம்... இந்த நான்கு தொகுதிளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளில் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமில்லாமல் கள்ள ஓட்டுபோடுவதிலும் 18 சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணப்பட்டுவாடா  செய்தவர்களின் பட்டியலை இலை கட்சியின் தலைமை கேட்டுள்ளது... அப்புறம் கூட்டணி கட்சிகளில் எல்லாவித பலத்துடன் இருக்கும் நபர்களை இலை கட்சி அந்ததந்த கட்சி தலைமையிடம் கேட்டுள்ளதாம்... அவர்கள் பூத்  கைப்பற்றுவது... கலாட்டா செய்து எதிர்கட்சியினரை திசை திருப்புவது போன்ற பணிகளில் மட்டும் ஈடுபடுவார்களாம்... அந்த பட்டியலும் தயாராகிவிட்டதாம்... கரன்சிகள் நான்கு தொகுதியில் பதுங்கி பல வாரங்கள்  கடந்துவிட்டதாம்.....’’ என்றார் விக்கியானந்தா.‘‘அதென்ன பாமக, தமாகா போன்ற கட்சிகளுக்கு திடீர் ஞானோதயம் பிறந்து இருக்கிறது...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.‘‘எதிர்முகாமில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் கூட்டணி தர்மத்தை மதித்து 4 இடைத்ேதர்தலில் பிரசாரம், களப்பணி செய்வதாக அறிக்கையும் நேரில் சந்தித்தும் வாக்குறுதி அளித்தன. ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள்  எல்லாம் ஏப்ரல் 18ம் தேதியோடு கூட்டணிக்கு மூட்டை கட்டிவிட்டு ஓய்வெடுத்து கொண்டுள்ளன... இதனால் டென்ஷனான அதிமுக தலைகள் நாட்டு நடப்பை அதிமுக தலைமைக்கு சொல்லி... வேலை செய்யவில்லை என்றால்  கூட பரவாயில்லை... குறைந்தபட்சம் அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்... அதை தொடர்ந்தே அதிமுக கூட்டணிகள் தரப்பில் இருந்து அறிக்கைகள் வந்து ெகாண்டு இருப்பதாக பேசிக்கிறாங்க...’’  என்றார் விக்கியானந்தா.

‘‘அதிமுக பேச்சாளர்கள் செம கடுப்பில் இருப்பதாக சொல்றாங்களே, அதுல உண்மை இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மே தின விழா பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும்  நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அதிமுக பேச்சாளர்கள்  கலந்து கொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு ₹10,000 வழங்கப்படுமாம். இந்த பணம் அவர்களின் ஒரு மாதம் செலவுக்கு பயன்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதாம். ஒவ்வொரு ஆண்டும் மே தினம் பொதுக்கூட்டத்துக்கு 10 நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவோர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிடுவது வழக்கம். ஆனால், இன்று வரை மே தினம்  பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொதுக்கூட்டம் இல்லை என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதனால், பேச்சாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது பேச்சாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஜெயலலிதாவே கூப்பிட்டு பாராட்டி சன்மானங்கள் வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது பேச்சாளர்களுக்கு மரியாதை  இல்லாமல் போய் விட்டதே என்று பேச்சாளர்கள் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்... இது இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்ற சில பேச்சாளர்கள் சொல்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சீட் கிடைக்காததால் சூலூரில் உள்ளடியில் இறங்கி இருக்கும் இலை கட்சியின் இரண்டு தலைகள் ஓப்பனாக வேட்பாளரிடமே சேலஞ்ஜ் செய்தார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்பிக்கையுடன் இருந்தார். சென்னை சென்று சேலம்காரரை நேரில் சந்தித்து, கோரிக்கை  மனுவும் அளித்தார். அதில், ``தனது அரசியல் அனுபவம் மூலம், இத்தொகுதியில் அதிமுக எளிதாக வெல்லும், அத்துடன், நான், தொகுதிக்கு உள்ளேயே வசிக்கிறேன், எனவே, எனக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்'' என  குறிப்பிட்டிருந்தார். இவரைப்போலவே, இதே தொகுதிக்குள் வசிக்கும் இலை கட்சியின் இன்னொரு சீனியரும் கோரிக்கை மனு அளித்தார். அதில், ‘ எனக்கு போட்டியாக மனு கொடுத்தவர் ஏற்கனவே எம்எல்ஏ., மேயர், அமைச்சர் என பல பதவிகளை  வகித்துவிட்டார். ஆனால், கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வரும் எனக்கு இதுவரை எந்த பதவியும் தரவில்லை. எனவே, எனக்குத்தான் சீட் தர வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தாராம். ஒரு தொகுதிக்கு இரண்டு பேர்  மல்லுக்கட்டுவதை அடுத்து இருவருக்கும் சீட் இல்லை என கட்சி தலைமை அறிவித்துவிட்டது. மாறாக, மறைந்த இத்தொகுதி எம்எல்ஏ கனகராஜின் சித்தப்பா மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சூலூர் தொகுதியை  கேட்ட இரண்டு பேரும் செம அப்செட். இவர்களை சமாதானம் செய்து, பிரசாரத்துக்கு அழைக்கும் முயற்சியில் வேட்பாளர் பலமுறை ஈடுபட்டார். ஆனால், இருவரும் சமாதானத்தை ஏற்கவில்லை... எப்படி இருந்தாலும், நாங்கள்  சப்தம் இல்லாமல் எங்களது வேலையை செய்வோம்... நீ எப்டி ஜெயித்துவிடுவாய் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ ‘‘உள்ளாட்சித்துறையில் தணிக்கை துறை இயக்குநராக இருக்கும் மோகன் என்பவரின் பதவி இந்த மாதத்துடன் முடிகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறையில் நடைபெறும் முறைகேடுகளை இந்த துறைதான்  கண்டுபிடிக்கும். இது குறித்து சட்டமன்றத்துக்கும் அறிக்கை அளிக்கும். இதனால், முறைகேடுகளை மறைக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் துறையாக இந்த துறை உள்ளது.  இதனால், இந்த துறையில் பதவி நீட்டிப்பு  பெற வேண்டும் என்று கடந்த சில நாட்களாக கோட்டையிலேயே இயக்குநர் தவம் கிடக்கிறாராம். இந்த பதவி நீட்டிப்பு வழங்கினால், பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பாதிக்கப்படும், அதேநேரத்தில் முறைகேடுகளும்  அதிகரிக்கும் என்றும் வருத்தப்படுகின்றனர் நேர்மையான ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்