SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்..: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு

2019-04-25@ 13:17:11

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை செயல்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய புலனாய்வு துறையின் ஒப்புதல் பெற வேண்டிய காரணத்தால் இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டது. எனினும் 7 பேரும் அப்போது விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரையும் விடுதலை செய்ய மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இந்த பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக நளினி ஒரு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே கடந்த செப் மாதம் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்த வேண்டும். 7 பேரையும் உடனடியாக முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கும், முதலமைச்சருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்திருந்தேன். இதுதொடர்பாக தாம் அளித்த மனு மீது உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், நீதிபதி சுப்பையா, கிருஷ்ணன் மற்றும் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்