SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்பலோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை

2019-04-25@ 11:08:16

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்பலோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ஆஜராக விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஆறுமுகசாமி ஆணையம் தவறாக புரிந்துகொள்வதாகக் கூறியும், மருத்துவக்குழு அமைக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு பதிலாக, 23 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அப்போலோ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவக்குழு அமைக்கும் வரை தங்கள் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  மனுவில் கூறியுள்ளது.  உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ப்பலோ மருத்துவர்கள்  இன்றும் ஆஜராகவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்