SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குளறுபடி: நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

2019-04-25@ 10:27:44

சென்னை: நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தாலோ அல்லது விவரங்கள் தவறாக இருந்தாலோ திருத்தம் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிழை உள்ள ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மே 5ம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்காக ஏப்ரல் 15ம் தேதி முதல் மாணவர்கள் நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அதில் சில தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு மைய எண் மற்றும் மையங்களின் பெயர்கள் மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் இருக்கும் தவறுகள் குறித்து தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர் முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்தால், அவர் தவறான விவரங்கள் கொண்ட நீட் தேர்வு நுழைவு சீட்டினை ஸ்கேன் செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, நுழைவு சீட்டின் நகலானது தேசிய தேர்வுகள் முகமைக்கு அனுப்பப்பட்டு தவறான விவரங்கள் சரிசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முன்னதாக, மதுரையை மையமாகத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஹால் டிக்கெட்டில் தேர்வுமைய முகவரியில் குளறுபடி ஏற்பட்டது. மதுரை மையத்தில், புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா நகர், திருநெல்வேலி, மதுரை, தமிழ்நாடு’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்று மதுரை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டில் குளறுபடி நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்