SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்

2019-04-25@ 07:53:31

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.79 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 8 பைசா உயர்த்தப்பட்டு ரூ..75.79-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் விலையானது நேற்றைய விலையிலிருந்து 9 பைசா குறைக்கப்பட்டு ரூ.70.17-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை குறைவு என்பது சிறிதளவே நடைமுறைக்கு வருகிறது. பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டுவிடுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டீசல் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சிறிது சிறிதாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. நடைபெற உள்ள மக்களவை தேர்தல் காரணமாக எரிபொருட்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்காது என மக்கள் நினைத்தனர். ஆனால் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிது சிறிதாக பெட்ரோல் விலை 5 பைசா, 6 பைசா என சமீப நாட்களாக உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாற்றத்தைச் சந்தித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்