SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் இருந்து பேஸ்புக் மூலம் வரவழைத்து வியாபாரியிடம் கத்தியைக் காட்டி 21 லட்சம் வைடூரியம் கொள்ளை

2019-04-25@ 03:59:41

பாரிமுனை: ஆந்திராவில் இருந்து பேஸ்புக் மூலம் சென்னைக்கு வரவழைத்து வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 21 லட்சம் மதிப்பிலான வைடூரிய கற்களை மர்ம கும்பல் பறித்து சென்றது. இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (53). வைர வியாபாரி. இவருடன் கடந்த மாதம் பேஸ்புக் வலைதளம் மூலம் அறிமுகமான ஒருவர், ‘‘எனக்கு அதிகளவில் வைடூரிய கற்கள் தேவை. எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன்’’ என கூறியிருக்கிறார்.இதையடுத்து சென்னை பாரிமுனையில் மூர் தெருவுக்கு நேற்று காலை சீனிவாச ராவ் தனது நண்பர்கள் கிஷான் பிரகாஷ் ஜெயின் மற்றும் 2 பேருடன் வந்தார். அவர் தன்னிடம் 830 கிராம் எடையுள்ள வைடூரிய கற்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.

மூர் தெருவில் சீனிவாச ராவ் மற்றும் நண்பர்கள் காத்திருக்கும்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் சீனிவாச ராவ் மற்றும் அவரது நண்பர்களிடம் வந்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டி அவர்களிடம் இருந்த ₹21 லட்சம் மதிப்பிலான வைடூரிய கற்கள், 2 செல்போன் மற்றும் ₹15 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் சீனிவாச ராவ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் வைடூரிய கற்களை இவர்களே ஆட்களை வைத்து கடத்தினார்களா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்