SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆத்திரம் சுங்கச்சாவடியை டிரைவர்கள் சூறை

2019-04-25@ 03:57:56

புழல்: செங்குன்றம் அருகே கூடுதல் கட்டணம் வசூலித்ததால் நல்லூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்த நல்லூரில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் சென்னையில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்று வருகின்றன.  இங்கு விதிமீறி அதிக கட்டணம்  வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட  தனியார் வாகன உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்க சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தகராறு நடப்பதும் உண்டு. இந்நிலையில் ேநற்று காலை 8 மணிக்கு புழலில் இருந்து கவரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வழக்கமாக ஆட்களை ஏற்றி செல்லும் வேன் வந்தது. அப்போது ஊழியர்கள் அதிக சுங்க கட்டணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பணியில் இருந்த வடமாநில ஊழியர்களுக்கும், வேன் டிரைவருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேன் டிரைவருக்கு ஆதரவாக அங்கிருந்த வாகன ஓட்டிகள் வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் புழல் கண்ணப்பசாமி நகர் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர்கள் பன்னீர் (34) மற்றும் ஜேம்ஸ் (40) ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் இழுத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் திரண்டனர். தங்களது வாகனங்களை நல்லூர் சுங்கச்சாவடியை சுற்றி நிறுத்தினர். பின்னர், சுங்கச்சாவடியில் விதி மீறி அதிகமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், காத்திருக்கும் போது உள்ளூர் வாகன ஓட்டிகளை தரக்குறைவாக பேசும் வடமாநில பணியாளர்களுக்கு எதிராகவும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் கடுமையாக போக்குவரத்து பாதித்தது.

  தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்து மறியலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி  நிர்வாகத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சமரசம் எட்டப்படவில்லை.
இதற்கிடையே அங்கு வந்த மர்ம கும்பல், சுங்கச்சாவடி அலுவலகத்திற்குள் புகுந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த வட மாநில ஊழியர்கள் ஜெய்லிங்கா (25) மற்றும் சந்தீப் ப்ரணா (23) ஆகியோரை தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர்.  மேலும் சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடியை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருட்களை சூறையாடியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, பொன்னேரி ஏடிஎஸ்பி பவன்குமார், கோட்டாட்சியர் நந்தகுமார், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் ேபச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், காயமடைந்தவர்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு வாகன போக்குவரத்தை சீர்படுத்தினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுங்க சாவடியில் தகராறு செய்ததாக 2 பேரை  கைது செய்தனர். தலைமறைவான 3க்கும் மேற்பட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நடந்த போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

 • roborestaurantbang

  பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்