SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்திகளுடன் சுற்றிய 4 பேர் கைது

2019-04-25@ 03:53:10

பெரம்பூர்: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்  வந்த ஷேர் ஆட்டோவில் சோதனை செய்தனர். சீட்டுக்கு அடியில் 4 பட்டாக்கத்திகள் இருந்தது. விசாரணையில் தண்டையார்பேட்டை, அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சையது சாகீர் (19), நேதாஜி நகர் 5வது ெதருவை சேர்ந்த ஜாகீர் (18), 18 வயது மாணவர் ஒருவர் மற்றும் தண்டையார்பேட்டை 3வது தெருவை சேர்ந்த முகமது அப்பாஸ் (18) என தெரிந்தது. இவர்களில் சையது சாகீர் கடந்த 2 நாட்களுக்கு முன், சாந்தி என்பவரிடம் இருந்து வாடகைக்கு ஆட்டோ வாங்கி வந்திருக்கிறார். இந்த கும்பலுக்கும் தண்டையார்பேட்டை பவர்ஹவுஸ் குப்பம் பகுதியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அவர்களை தாக்க, இவர்கள் ஷேர் ஆட்டோவில் பட்டாக்கத்திகளுடன் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்