SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடிக்கும் சோதனை

2019-04-25@ 01:42:43

வழக்கம் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு ஏற்பாடுகள் சொதப்பி இருக்கின்றன. தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதும் மாணவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலே இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்கிறதோ என்ற எண்ணம் இன்னும் மறைந்தபாடில்லை. காரணம் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் போது வரும் குளறுபடிகள். நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்த பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மாணவர்கள் படும்பாடு சொல்லிமாளவில்லை. தேர்வுக்கு தயாராவார்களா அல்லது இவர்கள் ெகாடுக்கும் சோதனைக்கு தயாராவார்களா என்று தெரியவில்லை. முதலில் காது கம்மல், கழுத்து செயினை கழற்றினார்கள். காரணம் எந்த அணிகலன்களையும் அணிந்து வரக்கூடாது என்று நீட் தேர்வு நடத்தும் சிபிஎஸ்இ அறிவித்துவிட்டதாம். அதற்காக தலைவிரி கோலமாக தமிழக மாணவிகளை மாற்றி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும் துப்பட்டா உள்ளிட்ட துணை ஆடைகளை களைந்தனர். ஐஏஎஸ் தேர்வுக்கு கூட இல்லாத கட்டுப்பாடு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்டது. நம் மாணவர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறதோ என்ற எண்ணத்தை அது உருவாக்கியது. காரணம் பிற மாநிலங்களில் மாணவ, மாணவிகள் எந்தவித கட்டுப்பாடும், வரையறையும், நெருக்கடியும் இல்லாமல் தேர்வு எழுதிச்சென்றதுதான்.

அதன் அடுத்த கட்டம் தேர்வு மைய ஒதுக்கீடு விவகாரம். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தேர்வு மையங்கள் குறைவாகவும் இருந்ததால் தென்காசி மாணவன் கூட, வட இந்தியாவில் உள்ள ஏதோ  ஒரு பெயர் தெரியாத ஊரில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வேண்டியது இருந்தது. தமிழக அரசு வழக்கம் போல் வேடிக்கை பார்த்தது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இத்தனை கஷ்டத்தையும் தாண்டி தேர்வு எழுதினால் கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்ததில் எக்கச்சக்க தவறுகள். இதற்கு பதிலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்டால், அதையும் உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றுவிட்டது சிபிஎஸ்இ. எல்லா கஷ்டங்களும் இந்த ஆண்டு தீர்ந்துவிடும் என்று பார்த்தால் வரும் மே 5ம் தேதி நீட் தேர்வுக்காக விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் மீண்டும் வேறு மாநிலங்களுக்கு பந்தாடப்பட்டு இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடு நடந்ததால் இந்த குளறுபடி என்று பதில் சொல்லி சிபிஎஸ்இ இப்போதும் சமாளிக்கும். கல்விதான் உலகிலேயே மிகவும் கடினமான பணி. அதை கற்று தேர்வு எழுத வருவோரை ஒவ்வொரு ஆண்டும் இப்படி சோதிப்பது தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடும் என்பதை அரசுகள் உணரவேண்டும். அது வரை இந்த சோதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்