SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு!

2019-04-24@ 17:52:27

தூத்துக்குடி : மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்தாண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டதாக வழக்கறிஞர் முத்துராமன் என்பவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் புகார் அளித்திருந்தார். தொழிற்பேட்டைக்கு முன்பே காப்பர் ஆலை அமைக்க நிலம் வழங்கியதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமாக சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சக இயக்குனர் கலியபெருமாள் தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்ற இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சிப்காட் துறை அலுவலர்கள், மாசு கட்டுபாட்டுவாரிய மற்றும் பிற அலுவலர்கள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலியபெருமாள் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம் என்றும், ஆலையில் பல்வேறு அடிப்படை பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள், மின் இணைப்பு உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்