SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரியகோயில், ஆனைமடுவு அணை பகுதியில் மழை இல்லாததால் விவசாயிகள் வேதனை

2019-04-24@ 11:51:02

ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையம் கரியகோயில், ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் மழை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா பாப்பநாயக்கன்பட்டியில், கரியகோயில் நீர்தேக்கமும், வாழப்பாடி தாலுகா புழதிக்குட்டையில் ஆனைமடுவு நீர்த்தேக்கமும் உள்ளது. இந்த நீர்தேக்கங்களிலிருந்து வாழப்பாடி, பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் பகுதியை சேர்ந்த ஏறத்தாழ 10 ஆயிரம் விவசாய நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறுகின்றன. கடந்த 3 நாட்களாக ஆத்தூர் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஏறத்தாழ 98 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

ஆனால் நீர்தேக்கங்கள் உள்ள பகுதியில் மிகவும் குறைவான அளவான 19மி.மீ மழை அளவே மழை பதிவானது. இந்த பகுதியில் அதிக அளவு மழை பெய்ததால் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். ஆனால் மிகவும் குறைந்த அளவே மழை பெய்ததால் ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து பகுதிகளில், போதிய மழையில்லாததால் விவசாய பணிகள் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் கல்வராயன் மலை தொடர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்த, பெருன்பான்மையான மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால், நகரப்பகுதியில் பெய்த மழையில் கால் பங்கு மழைக்கூட இந்த மலைப்பகுதியில் பெய்யவில்லை. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் வறண்ட நிலையில் நீர்தேக்கம் உள்ளது. எனவே அரசு இந்த பகுதியில் மழை வருவதற்காக நடவடிக்கைகளை எடுப்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மேலும் வனப்பகுதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை கண்டறிந்து, அவைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்