SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரைக்குள் இருந்து கிப்ட் பக்கம் கிளம்பிய ஆதரவு ஆளுங்கட்சியை அலற வைச்சிருக்காம் என்கிறார்: wiki யானந்தா

2019-04-24@ 03:59:53

‘‘என்ன சேலம்காரர் தலைமை செயலகம் வந்துட்டார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் பிரசாரம், கட்சி பணி என்று படுபிசியாக இருந்தவர் வந்துட்டார்... வந்தும் மே மாதம் வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் வரும் வரை அவர் முள் நாற்காலியில் உட்கார்ந்த கதை தான்... 23ம் தேதி 12 மணிக்கு பிறகு தான் நாற்காலி யாருக்கு சொந்தம் என்பது உறுதியாகும் என்பதால் 30 நாள் உட்கார்ந்துட்டு போகலாம்.. மற்றபடி அதிகாரிகளுடன் முக்கிய விஷயங்கள் எதையும் விவாதிக்க முடியாது... தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை அவர் அமைதிகாக்க வேண்டியதுதான்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறைபறவையிடம் கர்நாடக்காரர் ஏகத்துக்கு போட்டுவிட்டார் போல...’’என்றார் பீட்டர் மாமா.
‘‘சிறைபறவை தன் சொல்படி மட்டுமே கேட்க வேண்டும்... அவரின் அத்தனை சொத்துகளும் தனக்கே கிடைக்க வேண்டும்... வாரிசே இல்லாத அவரின் பல கோடி பினாமி சொத்துகளும் தனக்கே கிடைக்க வேண்டும்... அவருக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் தான், தன் மனைவி மட்டுமே இருக்க வேண்டும் என்று நிைனப்பதால்தான் என்னை வேண்டும் என்றே இடைத்தேர்தலில் நிற்க வைத்து தோற்கடிக்கவும் ஆட்களை ஏற்பாடு செய்துள்ளதாக கர்நாடககாரர் சிறைபறவையிடம் நெருப்பு பற்ற வைத்துள்ளார்... அந்த நெருப்பை தணிக்கவே சிறைபறவையை சந்திக்க கிப்ட் பாக்ஸ்காரர் செல்கிறார்... இன்னொரு புறம் இன்னொரு சிறைபறவை எச்சரிக்கை விடுத்தும்... விரக்தியின் விளிம்பில் உள்ள சிறைபறவை என் அக்காவும் போயிட்டா... கணவரும் போயிட்டார் நான் ஜெயிலுக்கு வந்துட்டேன்... எல்லாம் போச்சு... இனி நான் யாருக்காக வாழப்போகிறேன் என்று பேசுகிறாராம்... நாங்கள் இருக்கும்போது அப்படி பேசாதீங்க என்று சொன்னாலும் அடிக்கடி தனிமையை நாடி சென்றுவிடுகிறாராம் என்று சிறை தகவல்கள் சொல்கின்றன’’ என்றார் விக்கியானந்தா.
‘கிப்ட் பாக்ஸ்காரருக்கு தாமரை கட்சியிலும் சிலர் சப்போர்ட் பண்றாங்களாமே... அது இடைத்தேர்தலில் உபயோகமாக இருந்ததாமே'''' என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்... இலையும், கிப்ட் ஆகிய தரப்புகள் இடைத்தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் தந்தார்கள்... பணம் விஷயத்தில் வருமான வரித்துறையை வைத்து கொண்டு ரொம்பவே எதிர்கட்சிகளை மிரட்டியது தாமரை தரப்பு... ஆனால் இலை, தாமரை, கிப்ட் போன்றவர்கள் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா முதல் சூட்கேஸ் சூட்கசோக பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றிக் கொண்டே இருந்தார்கள்... இந்த ரகசிய தகவல்கள் எல்லாம் கிடைத்தும்... இலை தரப்பை சமாதானப்படுத்துவதற்காக ஒரே இடத்தில் மட்டும் 1 கோடிக்கும் மேல் பிடித்தது போல காட்டினார்களாம்... அதே சமயத்தில் எதிர்கட்சிகளை கண்கொத்தி பாம்புபோலவே இருந்து அங்கும் இங்கும் நகராமல் செய்துவிட்டார்கள்... இருந்தாலும் பணத்துக்கு விலைப்போகாத ஓட்டுகளை... இலையும் கிப்ட்டும் எவ்வளவு கொடுத்தும் வாங்க முடியலையாம்... அதேசமயம் கிப்ட் தரப்பினரை ஏன் வருமான வரித்துறையினர் பிடிக்கவில்லை... தேர்தல் பறக்கும் படை பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இரட்டையர்களான விவிஐபிக்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளர்கள் தேர்வில் இலையின் முக்கிய தலைவர்கள் தண்ணீ குடித்துவிட்டார்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இரண்டு மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என்று பலரும் பலத்த சிபாரிைச நேரடியாகவே சேலம், தேனிகாரரை சந்தித்து வற்புறுத்தினார்களாம்... ஆனால் அவர்கள் ரெகமண்ட் செய்த நபர்களை குறித்த ரிப்போர்ட் கார்டுகளை தூக்கி போட்டு இவர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு, கட்சியில் உள்ள எதிர்ப்பு, கோஷ்டி பூசலால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை புள்ளிவிவரங்களுடன் தூக்கி போட்டாராம்... அப்புறம் இறந்தவர்களின் வாரிசுகள், சொந்தங்களுக்கு சீட் கேட்டு மற்றொரு தரப்பு அணுகியதாம்... அதற்கு அவர்களிடம் இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அந்த தரப்புக்கும் விசுவாசமாக இல்லை... இப்போதும் அவர்களுக்கு சீட் கொடுத்துவிட்டு மெஜாரிட்டி நிரூபிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சிக்கலாகி விடும்... இப்போதைக்கு நாங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டுபவர்கள்தான் எங்களுக்கு வேண்டும்...’’ என்று கூறி அவர்களின் இறப்பு எங்களுக்கும் வேதனையளிக்கிறது... இருந்தாலும் கட்சி, ஆட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கனத்த மனநிலையில் இந்த முடிவை எடுக்கிறோம்...’’ என்று இரண்டு தரப்பு விவிஐபிக்களும் சொன்னார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நடிகரு கட்சியை துவங்குவரா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நடிகரு அண்ணன் சொன்னதை ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தால் ஒன்றே ஒன்று தெரிகிறது... நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்... அவர் நினைத்திருக்கும் முடிவு வந்தால் தேர்தலில் உடனடியாக களம் இறங்குவார்... இல்லையென்றால் 5 வருடம் காத்திருப்பார் என்பதாக அவருடைய ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்... கடந்த இரண்டு நாட்களாக இதுதான் ஹாட் டாபிக்... இதை கேட்ட வயது முதிர்ந்த ரசிகர்கள் திரும்பவும் முதலில் இருந்தா... என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சுட்டாரு...’’ என்று பீடிகை போட்டார் பீட்டர் மாமா.
‘‘யாரு பெரிய அய்யாவா... நாடாளுமன்ற தேர்தல் வரை அடக்கி வாசித்த பெரிய அய்யா... மீண்டும் மத்திய அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம், அண்ணா பல்கலை துணைவேந்தராக கவர்னர் நியமித்ததால் அவரையும் வறுத்தெடுத்துள்ளார்... கேட்டால் கூட்டணி என்பது தேர்தல் வரை தான்... அதன் பிறகு கூட்டணியே இல்லை என்று கூறுவார்... 7 கட்ட எலக்‌ஷனே முடியாத நிலையில் ஏன் இந்த திடீர் எதிர்ப்பு அறிக்கை என்று விசாரித்தால்... தன் மகனை அமைச்சராக்க வேண்டும்... வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற இரண்டே கோரிக்கை தான்... காரணம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பதால், எதிர்ப்பு மூலம் அமைச்சரவையில் கூடுதல் சீட்டு வாங்கலாம் என்பதுதானாம்...’’ என்றார் விக்கியானந்தா.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்