SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யார் பொறுப்பு?

2019-04-24@ 02:26:06

க டந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்க இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக பிரமதர் அறிவித்தார். இவ்விரு ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 50 நாளில் மக்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என மத்திய அரசு கூறிய நிலையில், இயல்பு நிலைக்கு வர 6 மாதம்ஆனது. பெங்களூர் அசிம்  பிரேம்ஜி பல்கலைக்கழகம் (ஏபியு) ‘’ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா’’ என்ற  தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், பணம் மதிப்பிழப்புக்கு பிறகு வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வேலையின்மை இருமடங்கு அதிகரித்துள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன. தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்து விட்டன. வேலை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. பணம் மதிப்பிழப்புக்குப்பின் ஏறக்குறைய 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிச்சுமையும் இதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்து 35 வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையே வேலையின்மை அதிகரித்துள்ளது.அதிலும்,பெண்கள் மிக மோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் சந்தையிலும், புள்ளிவிவர அமைப்பு முறையிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்வளம் மிகுந்த கோவை, திருப்பூர்  மாவட்டங்களையும் இந்நடவடிக்கை புரட்டிப்போட்டு விட்டது. இம்மாவட்டங்களில்,  பஞ்சாலை, இன்ஜினீயரிங், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட துறைகளில் மட்டும் 2.10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பி.எல்.எப்.எஸ் (Centre’s Periodic Labour Force Survey (PLFS) ) அறிக்கையின்படி, நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் தேசத்தின் சொத்து... வருங்கால இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தி... பலமான தூண்கள்... என  இளைஞர்களை புகழ்கிறோம். ஆனால், வேலையின்மையால் அந்த தூண்கள் ஆட்டம்  காண்கின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனால், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும், தேசம் வலுவிழக்கும், அப்பாவி  மக்கள்  பாதிக்கப்படுவார்கள்.இந்த பேராபத்தை உணர்ந்து, செயல்படவேண்டிய நேரம் இது. வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் சாமார்த்தியமான  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது, அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் பொறுப்பு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்