SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2019-04-23@ 17:59:23

சென்னை: தங்கப் பதக்கம் வென்ற தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டின் தோகா நகரில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி தொடக்க நாளிலேயே 5 பதக்கங்களை வென்று அசத்தியது.

இந்நிலையில் நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதி மாரிமுத்து, பந்தய தூரத்தை 2 நிமிடம் 4.96 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் 2ம் நாளான இன்று இறுதி சுற்று 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

ஆரம்பத்தில் கோமதி சற்று பின் தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்தார். திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமம் மணிகண்டன் பகுதியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில், தமிழக வீராங்கனை கோமதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்த கோமதி, மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்