SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அமைப்பு தகவல்!

2019-04-23@ 17:55:10

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 8 இந்தியர்கள் உட்பட 35 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். 6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முப்படை வீரர்களுக்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 45 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மேலும் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்