SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளரை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

2019-04-23@ 12:15:09

சென்னை : சென்னையில் அனுமதியின்றி போரட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கரும்பு தொகையை நிலுவையில் வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளரை கண்டித்து சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னால் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினர் மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வலியுறுத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, கடந்த 26 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய 420 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் கட்டிங் சார்ஜ் என்று கையெழுத்து பெற்று எங்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் எங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், வங்கியில் இருக்கும் எங்களது நகைகளை ஏலத்தில் விடுவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு காரணமான ராம் தியாகராஜனை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்