SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

40 ஆயிரம் பேரின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதால் குமரி தொகுதி வாக்குகளை எண்ணக்கூடாது: மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீனவர்கள் மனு

2019-04-23@ 04:36:47

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வசதியாக, அடுத்த மாதம் நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மீனவ அமைப்புகள்  கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18ம்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களில் 10  லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் வாக்களித்துள்ளனர். இது,  69.80 சதவீதமாகும். வாக்குப்பதிவின்போது, கடலோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோரின் பெயர் நீக்கப்பட்டு இருந்தது. இதனால், வாக்குசாவடிகளில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர கிராமங்களில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் போராட்டம் நடத்தினர். ஆட்சி மீதான எதிர்ப்பு காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு பொதுமக்கள்  வாக்களித்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக அமைப்புகள், மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டி இருந்தன. இந்தநிலையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.  இதேபோல் மக்கள் பாதை என்ற அமைப்பினர் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களில், ``கடந்த 18ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் பல்லாயிரம் பேர் வாக்கு அளிக்க முடியவில்லை. விடுபட்ட அனைவரும் வாக்கு அளிக்க, வேறொரு  நாளில் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் தமிழக தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர்,  ஜனாதிபதி உள்ளிடோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்