SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் குற்றச்சாட்டு புகாரில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் தலைமை நீதிபதிக்கு ஆதரவு

2019-04-23@ 04:20:53

புதுடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரில், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்து தரம் தாழ்த்தி கொள்ள விருப்பமில்லை என்று தலைமை நீதிபதி கருத்து  தெரிவித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர் நலச் சங்கம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக அது வெளியிட்ட தீர்மானத்தில், `தலைமை நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட, புனையப்பட்ட இந்த  குற்றச்சாட்டிற்கு உச்ச நீதிமன்ற ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

நீதித்துறை அமைப்பின் மீது களங்கம் விளைவிக்கவே இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில்,  குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் ஊழியர்கள் சங்கம் நீதித்துறை, தலைமை நீதிபதிக்கு உறுதுணையாக நிற்கும்' என்று கூறப்பட்டுள்ளது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் டெல்லி வீட்டில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், கடந்த அக்டோபரில் நடந்ததாக கூறிய பாலியல் குற்றச்சாட்டு நீதித்துறையும், தலைமை நீதிபதியையும்  ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்