SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்த மனு டிஸ்மிஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

2019-04-23@ 04:20:52

புதுடெல்லி: ‘‘சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அரசு செலவில் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று டிஸ்மிஸ் செய்தது.மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சொத்து குவிப்பு  வழக்கில் அவரை முதல் குற்றவாளி என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளதால், அவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது என அதில் கூறப்பட்டது.

 ஜெயலலிதா இறந்துவிட்டதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி என்பவர் மனு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றுக் கூறி, இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று டிஸ்மிஸ் செய்தது. இது தொடர்பாக  நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்