SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி திரைப்படம் பற்றிய அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஆணையம் தாக்கல்: 26ம் தேதி விசாரணை

2019-04-23@ 04:20:43

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தின் விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை 26ம் தேதி நடக்கவுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை கடந்த 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியிடப்படுவது,  தேர்தல் நடைமுறையை பாதிக்கும், எனவே தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின. இதனால் இந்த படத்தை  வெளியிட தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதி தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு செய்தனர். இவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘‘படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. முழு  படத்தையும் பார்க்கவில்லை’’ என்றார்.
இதனால் பிரதமர் மோடியின் முழு படத்தை பார்த்துவிட்டு அதன்பின் தடை செய்வதா, வேண்டாமா என்பது பற்றிய குறித்த விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  பிரதமர் மோடியின் படம் பற்றி விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தாக்கல் செய்தது. இதன் நகலை, படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கும்படியும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்  கூறியது. தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 26ம் தேதி விசாரிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்