SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைரேகை பிரிவு சப்-இன்பெக்டர் தேர்வு முறைகேடு தேர்வாணைய ஆலோசகர் ஜி.வி.குமாருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

2019-04-23@ 03:56:32

சென்னை:   தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய கை விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக் கான  தேர்வில் அருணாச்சலம் என்பவர் அளித்த பதில் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது.   இதை எதிர்த்து அருணாச்சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை போலியானது என்று மனுதாரர்  அருணாச்சலம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்வாணையத்தின் ஆலோசகரான ஜி.வி.குமார் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தி  என்பவரை ஆணையத்திற்கு அறிமுகம் செய்ததுடன் மூர்த்தியிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார். இவருமே சீருடை பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

 இந்நிலையில், ஜி.வி.குமாரை மத்திய குற்றபிரிவு போலீசார் ஏப்ரல் 1ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி ஜி.வி.குமார் உயர் நீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த்  வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் விசாரணை அதிகாரி முன்பு காலை 10.30 மணிக்கு ஆஜராக  வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜி.வி.குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்