SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10ம் வகுப்பு மேனிலை வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு

2019-04-23@ 03:43:33

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலை வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானது. இதையடுத்து, இம்மாத இறுதியில் பத்தாம் வகுப்புக்கும் அதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பிளஸ் 2 தேர்வில் தோல்வி  அடைந்த மாணவ, மாணவியர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் அவர்கள் உடனடியாக அந்த தேர்வுகளை எழுத வசதியாக சிறப்பு துணைத் தேர்வு நடத்த தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.

இதற்கான அட்டவணை தற்ேபாது ெவளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு துணைத் தேர்வில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களும்  பங்கேற்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதேபோல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு அட்டவணையும் ெவளியிடப்பட்டுள்ளது. இந்த துணைத்  தேர்வுகளை பொறுத்தவரையில் பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும்.  வழக்கம்போல கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் குறிப்புகள் எழுதவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்