SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

2019-04-23@ 03:43:32

சென்னை: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:  ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலங்களில் ஜெபித்துக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீதும், நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டினர்கள் மீதும்  தொடர்ச்சியாக குண்டு வெடிக்க செய்தது காட்டுமிராண்டித்தனம். எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த கொடிய செயலை செய்திருக்கும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. இக்கொடூரச் செயல், மன்னிக்க  முடியாத கண்டனத்திற்குரிய குற்றமாகும். எந்த நாட்டில் நிகழ்ந்தாலும், தீவிரவாதத் தாக்குதல் என்பது வேரோடு களைந்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கும்போது  நடந்திருக்கும் இச்சம்பவம், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இலங்கை அரசுக்கு பக்கபலமாக இந்திய அரசு துணை நின்று, உதவி புரிந்திட பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கொடுஞ் செயல் கண்டிக்கத்தக்கது. இயேசு பிரான் உயிர்த்தெழுந்த இந்நன்நாளில் நடைபெற்ற  இந்த படுகொலைகள் மன்னிக்க முடியாதவை. இலங்கை அரசு முழுவேகத்தோடு செயல்பட்டு இந்த கொடூர செயலுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்