SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு விசாரணை ரத்து: வெப்சைட்டில் அறிவிப்பு வெளியீடு

2019-04-23@ 03:43:27

புதுடெல்லி:  உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வாரம் நடத்த இருந்த வழக்கு விசாரணைகள் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நில ஆர்ஜித வழக்கு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் பெறும் மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர முடியாத அளவுக்கு அரசியல் சாசனப்பிரிவில் பாதுகாப்பு உள்ளதா என்பது உட்பட முக்கிய  வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வாரம் விசாரணை நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வெப்சைட்டில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வாரம் நடத்தும் வழக்குகளின் விசாரணை ரத்து செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்